மத்தேயு 8:9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.
இந்த அதிகாரியின் கீழுள்ள வேலைக்கார்கள் தங்களது எஜமானுக்கு எப்போதும் கீழ்ப்படிய ஆயத்தமாக உள்ளனர். அதாவது வா என்றால் வரவும் போ என்றால் போகவும் ஆயத்தமாக இருக்கின்றனர். ஆனால் இந்த எஜமானும் இன்னுமொரு அதிகாரத்திற்கு கீழ்ப்பட்டிருக்கிறான் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
அதாவது இந்த எஜமானின் கீழ்ப்படிவு தான் அவனது கீழுள்ள வேலைக்காரரையும் தனக்கு கீழ்ப்படிய வைக்கிறது. இந்த அதிபதி தனது அதிகாரத்தை தள்ளி விட்டால் இவனுக்கு கீழுள்ளோர் இவரது அதிகாரத்தை தள்ளி விடுவர். நாம் சாத்தானை ஜெயிக்க எளிய வழி இது தான். நாம் நமது பரலோக எஜமானுக்கு கீழ்ப்படிந்திருந்தால் சாத்தான் எமக்கு கீழ்ப்பட்டு இருக்க தான் வேண்டும். சாத்தான் மட்டும் அல்ல இயற்கை கூட கீழ்ப்படுத்தப்பட இதுவே இரகசியம்.
இயேசு கிறிஸ்து பிதாவுக்கு கீழ்ப்படிந்திருந்ததால் அவருக்கும் எல்லாமே கீழ்ப்பட்டிருக்க தான் வேண்டும். நீங்களும் மகா பெரிய காரியங்களை செய்ய வேண்டும் என்றால் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிருந்திருக்க வேண்டும். உங்களது வாயின் வார்த்தைகளும் அதிகாரம் பொருந்தியதாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் தேவனுக்கு கீழ்ப்படிந்திருங்கள்.
நாம் இந்த உலக அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும். அதாவது அரச அதிகாரிகளுக்கு, பிள்ளைகள் பெற்றோருக்கு, மனைவி கணவனுக்கு என நமது உலக அதிகாரங்களும் கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.

