நீதி 15.26 துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.வாழ்வில் பல்வேறு விடயங்கள் மனிதனுக்கு இன்பமானவைகளாக இருக்கின்றது. பணம், பொருள், சொத்து, ஆஸ்தி என்பன சிலருக்கு இன்பத்தையும் நித்திரை, வஞ்சனை, சோம்பேறித்தனம், இவை போன்ற செயல்கள் பலருக்கு இன்பத்தையும் அளிக்கின்றது.எமக்கு இன்பத்தை தரக்கூடிய ஓர் செயலுக்கு நாம் அதிக நேரத்தை செலவு செய்வோம். அந்த வகையில் உண்மையாக எது எமக்கு அதிகளவு இன்பத்தை தரக்கூடிய செயலாக உள்ளது.தேவ வார்த்தைகளை கேட்பது, வசனத்தை தியானிப்பது, தேவனை ஆராதிப்பது, இது போன்ற செயல்கள் எமக்கு இன்பமூட்டுகிறதா ? இவற்றிற்கு எவ்வளவு நேரத்தை செலவு செய்கின்றோம்….? ஆராய்ந்து பார்ப்போமா எம்மை….!!! அற்ப இன்பங்களுக்காக வாழாமல் நித்தியத்தை குறித்து சிந்தையாயிருப்போம் தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!!!

