நல்ல ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவருடைய கிருபையும் சமாதானமும் உங்களிடத்தில் அதிகமாய் பெருகுவதாக. சகேயு ஆண்டவருக்காய் இழந்த ஐந்து காரியங்கள் அல்லது இழக்க ஆயத்தமாய் இருந்த ஐந்து காரியங்களைக் குறித்து இந்த நாளிலே நாங்கள் தியானித்து கொள்ளலாம்.லூக்கா பத்துன்பதாதாதிகாரம் முதலாவது வசனம் தொடங்கி பத்து வசனங்கள் வரைக்குமாக வாசித்துக் கொள்ளுங்கள்.ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எங்கள் வாழ்விலே நாங்கள் பின்பற்ற ஆரம்பிக்கும் போது அல்லது அவரைச் சேவிக்க தொடங்குகிற போது எங்கள் வாழ்வில் பல காரியங்களை நாங்கள் இழக்க நேரிடலாம். ஒன்றை இழந்து போகாமல் இன்னொன்றை நாங்கள் பெற்றுக்கொள்ள முடியாது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய பெரிய ஈவுகளையும் ஒரு மனிதன் பற்றிப்பிடிக்க வேண்டுமானால் நிச்சயமாக அவன் பல காரியங்களை இழக்க வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடலாம்.அது தான் இந்த சகேயுவும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்காக தன்னுடைய வாழ்க்கையிலேயே பலவற்றை இழக்க வேண்டியிருந்தது. லூக்கா பத்தொன்பதாவது அதிகாரம் முதலாவது இரண்டாவது மூன்றாவது வசனங்கள் அவர் எரிகோவில் பிரவேசித்து அதன் வழியாக நடந்து போகையில் ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனிதன் இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியினால் ஜனக் கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல் இருந்தது. இயேசு கிறிஸ்துவைப் பார்க்க சகேயு விரும்பினான். அதற்காக அவன் சில முயற்சிகளை மேக்கொள்ள வேண்டியிருந்தது. நிச்சயமாக அவன் ஒரு குறிப்பட்ட சில மணி நேரங்களையாவது அவருக்காக இழந்திருக்க வேண்டும். அவர் ஒரு தலைவர், அவர் ஒரு ஐசுவரியவான், இப்படிப்பட்ட ஒருவருக்கு நிச்சயமாக நேரமே கிடைப்பதில்லை.ஆனால் இந்த மனிதன் தன்னுடிய நேரத்தை இழந்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பார்க்க வகைதேடினான். இன்றைக்கு பல மனிதர்களுக்கு நேரமே போதாது, நேரமே இல்லை என்ற ஒரு நிலமைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.உட்கார்ந்து வேதம் வாசிக்க நேரமில்லை, ஜெபிக்க நேரமில்லை, ஆலயம் செல்ல நேரமில்லை, ஊழியம் செய்ய நேரமில்லை, நற்கிரியைகளைச் செய்ய நேரமில்லை என்றே பட்டியல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.அருமையானவர்களே நேரத்தை நான்தான் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால் எல்லா விதமான வேலைகளைச் செய்வதற்கு போதுமான நேரம் இருக்கிறது. தூங்குவதற்கு நேரம் இருக்கிறது, சாப்பிடுவதற்கு நேரம் இருக்கிறது, அங்க மற்றவர்களைச் சந்திப்பதற்கு பேசுவதற்கு நேரம் இருக்கிறது, தொலைபேசி பாவிப்பதற்கு நேரம் இருக்கிறது, நாங்கள் ஆண்டவருக்காய் எவ்வளவு நேரம் கொடுக்குறோம் என்பதை இந்த நாளிலேயே நாங்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

