தானி 2.48 பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின்மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான்.மிகவும் பொருத்தமுள்ள ஒருவரையே இராஜா ஓர் அதிபதியாக, அதிகாரியாக நியமிக்கின்றார். சரியான தேவ மனிதர்களை இனங்கண்டு அவர்களுடன் ஐக்கியத்தை நட்புறவை ஏற்படுத்துவது மிக அவசியம். பொருத்தமற்ற உறவுகள் ஆண்டவரை நாம் தேடுவதில் தடையாக அமைந்து விடும். ஆண்டவருக்குள் நாம் பெலனடையவும், ஆண்டவரை கிட்டி சேரவும் துணை செய்யும் உறவுகளே எமக்கு பொருத்தமானவை. தேவையற்ற உறவுகளை அதாவது கிறிஸ்துவுக்குள் நாம் வளர தடையான நட்புகளை தூக்கி எறியவும் நாம் தயங்க கூடாது. அப்போது தான் நாம் சரியான பாதையில் பயணிக்க முடியும். அத்துடன் தேவ ஆசீர்வாதங்களை பெற்று கொள்ளவும் முடியும்.ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக

