யாக்கோபின் எத்தனையாவது வயதில் பென்யமீன் பிறந்திருக்க வேண்டும்?
(அண்ணளவாக )
விடை
யாக்கோபு எகிப்துக்கு சென்றபோது அவருக்கு 130 வயது. (ஆதி 47:9)
யோசேப்பு எகிப்தில் அதிபதியாக நியமிக்கப்பட்ட போது 30 வயது (ஆதி41:46)
7 வருட செழிப்பு காலத்திற்கு பிறகு, 2 வருட பஞ்ச காலத்தில் யாக்கோபு எகிப்துக்கு வந்தார் (ஆதி45:6)
அவ்வேளை யோசேப்பின் வயது 30+7+2= 39.
யோசேப்பு பிறந்தபோது யாக்கோபின் வயது 130-39=91 .
யாக்கோபின் குடும்பம் லாபானிடம் இருந்து புறப்பட்ட பின்னர்
சீகேமின் பட்டணத்திற்கு அருகே சில வருடங்கள் இருந்துள்ளார்கள் .
ஆகவே தோராயமாக 98-105 வயதிற்கிடையில் பென்யமீன் பிறந்திருக்கலாம்.


97—–98 வயதாயிருக்கலாம்…..