பிரசங்கி 4:14 – அரசாளச் சிறைச்சாலையில் இருந்து புறப்படுவாருமுண்டு. ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
[[ மேலே உள்ள வசனத்தை நன்றாக வாசித்து வேதாகமத்தில் உள்ள சம்பவம் ஒன்றினை உதாரணமாக தாருங்கள். ஒன்று அல்லது இரண்டு உதாரணங்களை கூட குறிப்பிட முடியும். Comments பகுதியில் விடை அளிப்பதால் இன்னும் பல பேருக்கு பிரயோஜனமாக இருக்கும்]]
Ecclesiastes 4:14 – For out of prison he cometh to reign; whereas also he that is born in his kingdom becometh poor.
“Read the verse carefully and share one or two examples from the Bible that match it. Write your answer in the comments section so that others can also benefit.”


யோசேப்பு
ஆதியாகமம் 41:14,40,41
யோசேப்பு
ஆதியாகமம் 41:14,40,41
1)யோசேப்பு
2)யோபு
Joseph
Prodigal son
Joseph – Genesis 41
David – Shepherd boy became king
Jehoiachin – 2 kings 24 : 15
Moses – Born in slavery family and brought up in palace
Daniel- Born Royal family taken as captive then reign
Mephibosheth – Jonathan’s son born in Royal became crippled and lifted up by King David
Nebuchadnezzar – Because of pride he lived with animals and later got His Kingdom
Saul himself → Born in kingdom, yet became poor because of his disobedience
யோசேப்பு
ஆதியாகமம் 41:14,40
சிதேக்கியா
2 இராஜாக்கள் 25:7
ஒசேயா
2 இராஜாக்கள் 17:4
யோயாக்கீம்
2 நாளாகமம் 36:5,6
Proverbs 13:7
அரசாளச் சிறைச்சாலையில் இருந்து புறப்படுவாருமுண்டு, ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு, இந்த வசனத்தின் முழுமையான பொருள் என்னவென்றால், சில சமயங்களில், மிக உயர்ந்த நிலையில் பிறந்தவர்கள் கூட ஏழ்மை நிலையை அடைய நேரிடும், அதே போல் சிறையில் இருந்தவர்கள் கூட உயர்ந்த நிலையை அடைய முடியும்.
!யோசேப்பு!
====///==///===
யோசேப்பை பொறாமையின் காரணமாக சொந்த “சகோதரர்களே” 20 வெள்ளிக்காசிற்காக “இஸ்மவேலரிடம்” விற்றுப்போட்டனர், யோசேப்பு எகிப்துக்கு கொண்டு போகப்பட்டான், பார்வோனுடைய பிரதானியும், தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய” போத்திபார்” அவனை இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான், “கர்த்தர் “யோசேப்போடே இருந்தார், கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு, யோசேப்பினிடத்தில் தயவு வைத்து, அவனை தனக்கு ஊழியக்காரனும், தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும், அவன் கையில் ஒப்புவித்தான், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்து விட்டு, தான் புசிக்கிற போஜனம் தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக் குறித்தும் விசாரிக்கவில்லை, “யோசேப்பு” அழகான ரூபமும், செளந்தர்ய முகமும் உடையவனாயிருந்தான், சிலநாள் சென்ற பின்பு அவன் எஜமான் மனைவி அவன் மேல் ஆசைக்கொண்டு தப்பு செய்ய வற்புறுத்தினாள், ஆனால் யோசேப்போ கர்த்தருக்கு பயந்ததால், அந்த தவறை செய்ய ஒப்புக்கொள்ளவில்லை, அதனால் அவள் யோசேப்பின் மேல் வீண்பழி சுமத்தி அவனை சிறைச்சாலையில் அடைக்க வைத்தாள், கர்த்தரோ யோசேப்போடே கூட இருந்து, சிறைச்சாலை தலைவனுடைய தயவு கிடைக்கும்படி செய்தார், அதன் பிறகு எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான், அதனுடைய அர்த்தத்தை யோசேப்பு சரியாக பார்வோனுக்கு விளக்கி கூறினான், அதனால் பார்வோன் யோசேப்பை சிறையில் இருந்து வெளியேற்றி, எகிப்திற்கே அதிபதியாக வைத்தான், பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தை கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாக கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்,
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி, நான் பார்வோன், ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.
மேலும், பார்வோன் யோசேப்புக்கு “சாப்நாத்பன்னேயா” என்கிற பெயரையிட்டு , ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய “போத்திபிராவின்” குமாரத்தியாகிய “ஆஸ்நாத்தை” அவனுக்கு மனைவியாக கொடுத்து, யோசேப்பை எகிப்து தேசம் முழுவதற்குமே அதிபதியாக வைத்தான். இது “சிறையிலிருந்த”ஒருவர் “ராஜாவாக” உயர்த்தப்பட்டதற்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.