img 20250823 wa0000

இராஜ்ஜியத்திற்கு தடையாக இருக்கும் மூன்று இராட்சதர்கள் // Tamil Christian Message



தேவனுடைய இராஜ்ஜியத்திலே சில காரியங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது அல்லது கட்டாயமாக செய்யப்பட வேண்டியதாய் இருக்கிறது. அதாவது ஜெபம் பண்ணுதல், வேதத்தை வாசித்தல், வேதத்தை தியானம் செய்தல், நற்கிரியைகளை செய்தல், ஊழியம் செய்தல், சபை ஆராதனைகளில் பங்கெடுத்தல் என இவ்வாறு பல்வேறு காரியங்கள் தேவனுடைய ராஜ்ஜியத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றது.ஆனால் சில வகையான இராட்சதர்கள் நம் வாழ்வை மேற்கொள்வதால் அல்லது நம் வாழ்வினை ஆளுகை செய்வதனால் நாம் இந்த தேவ ராஜ்யத்திற்குரியவைகளை விட்டு விலகி அந்த மோசம் போக்கும் இராட்சதர்களினால் நம்முடைய வாழ்க்கையை நாம் சீரழித்து விடுகிறோம். ஆனால் நாம் அந்த ராட்சதர்களை அடையாளம் கண்டு அவர்களை நாம் மேற்கொள்ள வேண்டும்.



வேதாகமத்திலே கோலியாத் என்கின்றதான பெரிதான ஓர் இராட்சதனை குறித்து நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் சவுல் ராஜாவும் அவனுடைய சேவகரும் மிகவும் பயந்து, ஒழித்து அவனுடைய வார்த்தைகளினால் அஞ்சி 40 நாட்கள் காலையும் மாலையும் அவனது குரலையே கேட்டு அவனது சத்தத்துக்கு அஞ்சி வாழ்ந்த ஓர் வாழ்வை நாம் வேதாகமத்தில் இருந்து வாசித்து அறிகிறோம். ஆனால் தாவீதும் அவனுடைய சேவகர்களும் கோலியாத் தோன்ற இராட்சதர்களை மட்டுமின்றி பல்வேறு இராட்சதர்களை மேற்கொண்ட சம்பவங்களை நாம் வேதாகமத்தை வாசித்து நன்றாய் அறிந்து கொள்ள முடியும். அவ்வாறே 1நாளாகமம் 20 வது அதிகாரத்தை நாம் தியானித்து அங்கே தாவீதும் அவனுடைய சேவகரும் இராட்சதர்களை மேற்கொண்ட சம்பவத்தை நாம் தியானித்து தேவ ராஜ்யத்திலே நாம் வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மை அர்ப்பணிப்போம்.



1 நாளாகமம் இருபதாம் அதிகாரத்திலே மூன்று இராட்சதர்களை தாவீதின் சேவகர்கள் கொலை செய்வதை நாம் வாசித்து அறிந்து கொள்ளலாம். இந்த மூன்று இராட்சதர்களின் பெயர்களின் அர்த்தங்களை நாம் தெரிந்து கொண்டு இது போன்ற ராட்சதர்கள் நம் வாழ்விலும் எழும்பி நம்மை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்தாலும் இயேசு கிறிஸ்துவின் சீடர்களாய், சேவகர்களாய் நாமும் இந்த இராட்சதர்களை மேற்கொண்டு தேவனுடைய இராஜ்யத்திற்குரியவைகளை அதிகமாய் தேடி வெற்றி பெற்ற ஒரு கிறிஸ்தவ வாழ்வை வாழ எம்மை அர்ப்பணிப்போம். இராட்சதர்கள் நம் வாழ்வில் எழும்பி நம்மை மேற்கொள்ள முயற்சிகளை எடுத்தால் நிச்சயமாக அது நம் வாழ்விலே வேதனைகளையும், பயத்தையும், மிகுந்த துக்கத்தையும், சமாதானம் அற்ற சூழ்நிலைகளையும் நிச்சயமாக உருவாக்கும். அதனால் நாம் இராட்சதர்களை முறியடித்து தேவராஜ்ஜியக்குரியவைகளிலே நிலைத்திருப்போம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக!!!



முதலாவதாக 1 நாளாகமம் இருபதாவது அதிகாரம் நான்காவது வசனத்தை நாம் வாசிப்போம். அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள்.இங்கே சிப்பாயி என்கின்றதான ஓர் இராட்சதன் கொலை செய்யப்படுகிறதை நாம் வாசித்து அறிகிறோம். இந்த சிப்பாயி என்கின்ற இராட்சதனின் பெயரின் அர்த்தம் என்னவென்றால் வரம்பு அல்லது வெள்ளிக்கோப்பை என்று அர்த்தப்படும். தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு உட்பட்ட நாம் ஓர் வரம்புக்கு உட்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அதாவது ஒரு வரம்பு மீறின வாழ்க்கையை நாம் வாழ முடியாது. எல்லாவற்றுக்கும் தேவன் ஒரு எல்லையை நியமித்திருக்கிறார்; நாம் அந்த எல்லையை தாண்டி வாழ்ந்தால் நாம் தேவராட்சியத்துக்கு உரியவர்களாக இருக்க மாட்டோம்.



இவனுடைய பெயரில் வெள்ளிக் கோப்பை என்ற அர்த்தமும் மறைந்துள்ளது. அதாவது வெள்ளி, பொன் போன்ற உலக பொருட்கள் மீது அதிகமான நாட்டத்தை அல்லது பேராசையை நாம் வைக்க கூடாது. தேவ இராஜ்ஜியத்துக்கு உட்பட்ட நாம் அந்த இராஜ்யத்திற்குரியவைகளிலே தான் நம்முடைய சிந்தனைகள், எண்ணங்கள், விருப்பங்களை வைக்க வேண்டும். இன்றைக்கு பெரும்பாலான மக்கள் உலகப் பொருட்களை தேடுவதிலும் அடைவதிலுமே தங்களுடைய அதிகமான நேரத்தை போக்குகிறார்கள். இராஜ்ஜியத்துக்குரிய காரியங்களான ஜெபம் செய்தல், வேதம் வாசித்தல், நற்கிரியைகளைச் செய்தல், ஊழியங்களில் பங்கெடுத்தல், கனி உள்ள வாழ்க்கை வாழ்தல் ஆகிய இது போன்ற காரியங்களில் வாஞ்சையற்று உலகப் பொருட்களை சேகரிப்பதிலும் அதிகமதிகமாய் சேர்த்து வைப்பதிலும் மிகவும் ஆசை கொண்டவர்களாக உள்ளனர்.



அன்பானவர்களே!! இந்த உலகத்தில் நாம் ஒன்றும் கொண்டு வந்ததும் இல்லை, ஒன்றும் கொண்டு போகப் போவதும் இல்லை. நாம் நமக்கு இருக்கிறவைகளில் போதும் என்ற மனநிலையோடு வாழ வேண்டும். எல்லை தாண்டிய ஆசை அது பேராசையாகும். எல்லை மீறின விருப்பம், ஆபத்தில் நம்மை கொண்டு போய்விடும். வேதம் சொல்லுகிறது ஐசுவரியாவன்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள் என்பதாக. நாம் போதுமென்ற மனநிலையுடன் கூடிய தேவ பக்தியுடன் வாழ நம்மை தேவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். பொருளாசை கொண்ட சவுல் ராஜா கடைசியில் பேரழிவையை சந்தித்தார். இதே போல தான் தேவனுடைய மனுஷனாக கருதப்பட்ட பிலேயாமும் இறுதியில் அழிவையே சந்தித்தார்.



பொருளாசையானது ஒரு நாளும் ஒருபோதும் ஒருவரை திருப்திக்குள்ளாக நடத்துவதில்லை. அது இன்னும் இன்னும் அடைய வேண்டும் என்கின்ற தான ஆவலையே தோற்றுவிக்கிறது. இதனால் மனிதர்களுடைய வாழ்விலே வேதனைகளும், துக்கங்களும், பாரங்களும், கடன்களும், அதிகமான பிரச்சனைகளும், குடும்பத்தில் குழப்பங்களும் ஏற்பட வழி வகுக்கிறது. நாம் மற்றவர்களைப் போல வாழ ஆசைப்படுவதாலும் மற்றவர்களை விட மேலானவர்களாக நம்மை காண்பிக்க வேண்டும் என்கின்ற ஆசையிலும் தான் இன்று மக்கள் வாழ விரும்புகிறார்கள். நம்மை பெரியவர்களாக காட்டிக் கொள்ளவும் நாம் சில நேரங்களிலே முயற்சிக்கிறோம். பொருட்களை சம்பாதிப்பது என்பது இன்னொரு வகையிலே அது நம்மை நேர்மையற்ற வழியிலும், உண்மையற்ற வழியிலும், பொய்யிலும், ஊழலிலும், நியாயம் அற்ற வழியிலும் நடத்துகிறது. ஆனால் தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு உட்பட்டவர்களாகிய நம்முடைய வாழ்க்கை இதுபோன்ற சுபாவங்களை கொண்டிருக்க கூடாது.



பொருள் ஆசை கொண்ட மனிதர்களால் ஜெபம் பண்ணவோ, வேதத்தை வாசிக்கவோ, வேதத்தை தியானிக்கவோ, ஆலயத்துக்குச் செல்லவோ, ஊழியங்களில் பங்கு பற்றவோ நாட்டம் வராது. மாறாக பொருட்களை எவ்வாறு சேர்த்துக் கொள்வதில் என்பதில் தான் முழு சிந்தையும் முழு எண்ணமும் நிறைந்திருக்கும். இதனால்தான் எசேக்கியேல் 33; 31 இல் ஆண்டவராகிய தேவன் எசேக்கியல் தீர்க்கதரிசியிடம் இவ்வாறு சொல்கிறார் ஜனங்கள் கூடி வருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து உனக்கு முன்பாக என் ஜனங்கள் போல் உட்கார்ந்து என் வார்த்தைகளை கேட்கிறார்கள் ஆனாலும் அவர்கள் அவைகளின் படி செய்கிறதில்லை அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய் பேசுகிறார்கள் அவர்கள் இருதயமோ பொருளாசையை பின்பற்றி போகிறது. ஆகவே நாம் வாசிக்கிற வண்ணமாக பொருளாசை கொண்ட மனிதர்கள் ஆலயத்துக்கு ஒரு வழக்கத்துக்கு போவதைப் போல போய் வருவார்கள்; அதாவது அவர்கள் சடங்கு சம்பிரதாயமாக அதை செய்வார்கள். ஆராதனைகளிலே பங்கெடுக்கிறார்கள், வார்த்தைகளை கேட்கிறார்கள் ஆனாலும் ஒருபோதும் அவைகளின் படி நடக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவருடைய இருதயம் பொருளாசையை சாய்ந்து இருக்கிறது.



லூக்கா 16:14ல் நாம் இவ்வாறு வாசிக்கலாம் இவைகளை எல்லாம் பொருள் ஆசைக்காரராகிய பரிசேயர் கேட்டு அவரை பரியாசம் பண்ணினார்கள். இங்கே இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களை பரிசேயர்கள் கேட்டார்கள். ஆனால் அவர்கள் பொருளாசைக்காரராக இருந்ததினால் அவரை பரியாசம் பண்ணினார்கள். நம்முடைய வாழ்விலும் நாம் பொருளாசைகாரராக இருந்தால் தேவனுடைய ராஜ்யத்தை பரியாசம் பண்ணுகிறவர்களாகவே இருப்போம். பிசாசானவன் ஆண்டவரை சோதிக்கும் போது அவரை உயர்ந்த மலையின் மேல் கொண்டு போய் உலகத்தின் சகல இராஜ்ஜியங்களையும் காண்பித்து இவைகளை எல்லாம் நான் உமக்கு தருகிறேன் நீர் என்னை வணங்கிக் கொள்ளும் என்று வேண்டிக் கொள்ளுகிறான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனைப் பார்த்து அப்பாலே போ சாத்தானே என்று சொல்லுவதை நாம் வாசிக்கிறோம். இயேசு கிறிஸ்து சொல்லுகிறார் உங்களுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்களுடைய இருதயமும் இருக்கும் என்பதாக. ஆகவே இந்த சிப்பாயி போன்ற இராட்சதர்களை நாம் அடையாளம் கண்டு அவனை அழித்துக் கொண்டால் மாத்திரமே நாம் தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரியவர்களாய் இருந்து முதலாவது தேவனையும் தேவராஜ்யத்தையும் நாம் தேட முடியும்.





என்னத்தை குடிப்போம் என்னத்தை உண்போம் என்றே அவர்களுடைய சிந்தனையும் அவர்களுடைய செயலும் அமைந்திருக்கிறது. நாள்தோறும் இதைக் குறித்து சிந்தித்து இதைக் குறித்து கவலைப்படவும் செய்கிறார்கள். இயேசு சொல்லுகிறார்; என்னத்தை உண்போம் என்னத்தை குடிப்போம் என்று கவலைப்படாதீர்கள், ஆகாயத்து பட்சிகளை கவனித்து பாருங்கள்; அவைகளை போஷித்து காப்பாற்றுகிற அந்த ஆண்டவர் அவைகளைவிட விசேஷமாகிய மனிதர்களாகிய உங்களை நிச்சயமாகவே போஷித்து காப்பாற்றுவார் என்பதாக. சில நேரங்களிலே உணவின் மீது மனிதன் மிகுந்த இச்சை உள்ளவனாக இருக்கிறான். பல இஸ்ரவேர்கள் அதாவது எகிப்தில் இருந்து புறப்பட்ட இஸ்ரவேலர்கள் வனாந்தரத்திலே அழிக்கப்பட்டதற்கு உணவின் மீது இருந்த இச்சையும் ஒரு காரணம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இஸ்ரவேலர்கள் ஒருமுறை எவ்வாறு உணவை சேர்த்தார்கள் என்று பாருங்கள் எண்ணாகமம் 11; 32 இல் இவ்வாறு சொல்லப்படுகிறது அப்பொழுது ஜனங்கள் எழும்பி அன்று பகல் முழுவதும் இரா முழுவதும் மறுநாள் முழுவதும் காடைகளை சேர்த்தார்கள் கொஞ்சமாய் சேர்த்தவன் பத்து ஓவர் அளவு சேர்த்தால் அவர்களை பாளயத்தை சுற்றிலும் தங்களுக்கு குவித்து வைத்தார்கள் இங்கே தெளிவாக சொல்லப்படுகிறது பகல் முழுவதும் இராமுழுவதும் மறுநாள் முழுவதும் காடைகளை சேர்த்தார்கள் என்று கிட்டத்தட்ட இரண்டு நாள் முழுவதுமாக காடைகளை சேர்க்கிறார்கள்.



இன்றும் மனிதர்கள் இவ்வாறு தான் அதாவது அவர்களுக்கு சாப்பிடுவதற்கு நேரமில்லாமல் சாப்பாட்டுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். உணவு என்கின்ற ஓர் காரியத்திற்காகவே மனிதன் அதிகமதிகமாய் பிரயாசப்படுகிறான். தன்னுடைய வாழ்நாளின் அதிகமான நேரத்தை அதற்காகவே செலவு செய்கிறான். எதிர்காலத்தை குறித்து மிகுந்த கவலை அடைகிறான். எப்படி உணவு உண்பேன், எப்படி எனக்கு கிடைக்கும் இதைக் குறித்து அதிகமாகவே கவலைப்படுகிறான். இருப்பதை கூட சந்தோஷமாய் அனுபவிக்க முடியாத மன நிலையில் தான் அதிகமானோர் இருக்கின்றனர். ஆதி மனிதர்களாகிய ஆதாம் ஏவாள் வீழ்ந்ததற்கு காரணம் இந்த உணவு தான் என்பதை நாம் அறிந்திருக்கின்றோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பிசாசு சோதிக்கிற போது இந்த கல்லுகளை அப்பமாக்குமென்றே சொல்லுகிறான். தானியேலை கவனித்து பாருங்கள். உணவினால் தன்னை சீரழித்து விடக்கூடாது என்று அவர் மிகவும் கவனமாக இருக்கிறார். ராஜாவின் உணவினால் தன்னை தீட்டுப் படுத்தக் கூடாது என்கின்றதான அறிவினால் அவர் நிறையப்பட்டிருந்தார். இந்த உணவு என்கிற ராட்சதனை அவர் அழித்ததினால் அவருடைய வாழ்விலே பெரிதான ஆசீர்வாதத்தை அவர் பெற்றுக் கொண்டார். எல்லாரையும் விட அவர் ஞானவனாக இருந்தார். எல்லாரிலும் பார்க்க மிகுதியான உயர்வுகளையும் அவர் ஆண்டவரினால் பெற்று இருந்தார்.





உணவு மற்றும் பொருட்கள் வாழ்க்கைக்கு தேவையானவை தான். ஆனால் எல்லை தாண்டும் போது அதுவே நமக்கு பெரும் பிரச்சனையாக மாறிவிடுகிறது அளவுக்கு மீறி ஆசை நம்மை பாவத்திற்கு கொண்டு போய் சிக்கி விடுகிறது. நாம் வேத வசனம் என்கின்ற உணவில் மிகவும் பிரியமாய் இருக்க வேண்டும். இரவும் பகலும் அதில் பிரியமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான் என்று வேதம் சொல்லுகிறது. நாம் வாஞ்சையோடு வேத வசனத்தை வாசித்து அனுதினமும் அதனை தியானித்து அதனையே இலக்காகக் கொண்டு ஓட வேண்டும்.ஆகவே நாம் தேவ ராஜ்ஜியத்துக்குரியவர்களாக வாழ பிரயாசப்பட்டு இந்த இராட்சதனையும் நாம் அடையாளம் கண்டு நம்முடைய வாழ்க்கையில் அவனை அழித்து நான் வெற்றியுள்ள ஒரு கிறிஸ்தவ வாழ்க்கை வாழ பிரயாசப்படுவோம்.



மூன்றாவதாக 1 நாளாகமம் 20;6 வது வசனத்தை வாசிப்போம். மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து,இங்கே இந்த இராட்சதனை குறித்து அவனுடைய பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவன் ஒரு நெட்டையனான ஒரு மனுஷன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். பொதுவாகவே இராட்சதர்கள் நெட்டையர்களாகத்தான் இருக்கிறார்கள். இருப்பினும் இவனது பெயர் குறிப்பிடப்படாமல் நெட்டையனான ஒரு மனுஷன் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால் நிச்சயமாக அதில் மறைந்திருக்கும் ரகசியத்தை நாம் ஆராய்வோம்.



அதாவது தேவனுடைய ராஜ்யத்தில் உணவு, பொருளாசை மட்டும் தடையல்ல. வேறு பல காரியங்களும் இருக்கின்றன. அவ்வாறான ஏதாவது தேவனுடைய இராஜ்ஜியத்துக்கு எதிரிடையான ஓர் காரியம் இருக்கும் என்றால் அதுவே நமக்கு நெட்டையான இராட்சதன் ஆகும். உதாரணமாக தேவனுடைய இராஜ்யத்திற்கு சில வேளைகளில் எமது உறவுகள் ஒரு பெரும் தடையாக அமைந்து விடும். அல்லது ஏதாவது ஒரு இச்சை அதாவது பண ஆசை அல்லது பெண்ணாசை அல்லது இவ்வாறு ஏதோ ஒரு காரியம் நமக்கும் தேவனுக்கும் இடையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துமாக இருப்பின் அதுவே நெட்டையான இராட்சதன் ஆகும்.



நீங்கள் தேவனுக்கு கொடுக்கும் நேரத்தை விட, கனத்தை விட அதிகமான நேரத்தையோ கனத்தையோ ஏதோ ஒன்றுக்கு கொடுப்பீர்களாக இருப்பின் அதுவே நம்முடைய வாழ்க்கையின் நெட்டையான இராட்சதன் ஆகும். நமக்கு முதலாவது தேவனும் தேவனுடைய இராஜ்ஜியமே முக்கியம் உள்ளதாக இருக்க வேண்டும். அதுவே மற்ற எல்லா காரியங்களையும் விட பெரிதானதாக இருக்க வேண்டும். அதாவது நெட்டையானதாக இருக்க வேண்டும். சாலமோனின் வாழ்க்கை சரிதையை நாம் ஆராய்ந்து பார்க்கிற பொழுது அவர் தேவனுடைய காரியங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட ஏனைய காரியங்களுக்கு அதிகமான முக்கியத்துவத்தை கொடுத்திருந்தார் என்பதை நாங்கள் கண்டு கொள்ளலாம். அதிகமான பெண்களை தேடிக் கொண்டிருந்தார், மயில்கள், குரங்குகள் என கொண்டு வந்து நேரத்தை வீணடிக்கும் பல்வேறு விடயங்களை செய்து கொண்டிருந்தார். இறுதியில் அவரது வாழ்க்கை விக்கிரக ஆராதனை செய்யும் வாழ்க்கையாக மாறியது என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.



நாம் சில நேரங்களில் சில உறவுகளுக்கு அதிக நேரத்தை செலவு செய்கிறோம். ஆண்டவருக்கு கொடுக்கிற நேரத்தை விட நமது உறவுகளுக்கு செலவு செய்கிற நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. சிலவேளைகளில், இன்று எம் நாட்களில் அதிகமாக சமூக ஊடகங்களையும் செய்தி தளங்களையும் இணையதள பாவனையும் அதிகமாக கொண்டிருக்கிறோம். அதாவது அவைகளே நமக்கு நெட்டையான ராட்சதர்கள் என்பதை நாம் அறியாமல் அதிலேயே மூழ்கி இருக்கிறோம். இவ்வகையான நெட்டையான இராட்சதர்கள் அடையாளம் காணப்பட்டு அவைகளை முற்றுமாக நாம் அழித்து தேவனுடைய இராஜ்ஜியத்துக்குரிய காரியங்களிலே மூழ்கி அவைகளை முழு இருதயத்தோடு முழு பெலத்தோடு முழு உள்ளத்தோடு செயல்படுத்துகிற பொழுது நாம் தேவனுடைய பெரிதான ஆசீர்வாதங்களை நம்முடைய வாழ்க்கையில் சுதந்தரித்துக் கொள்வோம்.



தாவீதம் அவனுடைய சேவகர்களும் எந்த ஒரு இராட்சதனையும் விட்டு வைக்கவில்லை. அவர்களைக் குறித்து பயப்படவும் இல்லை. அவர்களை அழிப்பதை குறித்து சற்றும் கலங்கவும் இல்லை. அழிக்க வேண்டிய தருணங்களில் அனைத்தையும் அழித்தார்கள். இதனால் அவர்களுடைய தேசத்திலே சமாதானமும் மகிழ்ச்சியும் மக்கள் மத்தியில் அமைதியும் செழிப்பும் உண்டானது. நம்முடைய வாழ்க்கையிலும் அழிக்க வேண்டிய இராட்சதர்களை நாம் இனம் கண்டு சரியான நேரத்தில் அவற்றை அழித்து தேவனுடைய இராஜ்ஜியத்தை முழுமனதோடு தேடுவோம்.







Great Light Church .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *