img 20250818 wa0000

Double Quiz – 590 | Tamil Bible Quiz| இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா விடை

ஆண்டவருடைய கிருபையும் சமாதானமும் உங்கள் மத்தியில் அதிகமாய் பெருகுவதாக!! நாம் பரிசுத்த வேதாகமத்தை வாசித்து அதில் தேர்ச்சி பெறவும் முதிர்ச்சி அடைவதும் மிகவும் அவசியமாகும். அதற்காக உங்களை உற்சாகப்படுத்துவதும் ஊக்கப்படுத்துவதுமே இந்த வேத வினாக்களின் முக்கியத்துவம் ஆகும். ஆகவே வேதாகமத்தை படித்து நீங்களாகவே பதிலளிக்க முயற்சியுங்கள். இதனை மற்றவர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். உங்களது சொந்த சமுக ஊடகங்களில் இதனை பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்பமான கனியினால் கண்கள் திறக்கப்பட்டது யாருக்கு ?

இனிமையான தேனினால் கண்கள் தெளிவடைந்தது யாருக்கு?

5 thoughts on “Double Quiz – 590 | Tamil Bible Quiz| இரட்டை கேள்வி| தமிழ் வேதாகம வினா விடை”

  1. ஏவாள்

    ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான்.
    ஆதியாகமம் 3:6

    அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது. அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள்.
    ஆதியாகமம் 3:7

    யோனத்தான்

    ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது. ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டு தன் வாயில் வைக்க வில்லை. ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
    1 சாமுவேல் 14:26

    யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்பட வில்லை. அவன் தன் கையிலிருந்தகோலை நீட்டிக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான். அதினால் அவன் கண்கள் தெளிந்தது.
    1 சாமுவேல் 14:27

  2. Justina Muraleetharan

    ஆதாம், ஏவாளுக்கு
    ஆதியாகமம் 3:6,7
    யோனத்தானுக்கு
    1 சாமுவேல் 14:27

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *