img 20250819 wa0004

செய்தி நினைவில்லை ஆனாலும் தரமான செய்கை | Tamil Story| inspirational Stories| Moral Story

ஓர் நடுத்தர வயது மதிக்கத்தக்க பெண் ஞாயிற்றுக்கிழமை வழமை போல ஆலயத்திற்கு சென்று ஆராதனை முழுவதுமாக பங்கேற்றாள். ஆராதனை முடிவடைந்ததும் சந்தோஷமாக வீடு திரும்பினாள்.



அன்று மாலை அவளது கணவன் வேலையில் இருந்து வீடு திரும்பினான். அவன் எப்போதாவது தான் ஆலயத்திற்கு செல்பவன். அவன் பாரம்பரிய கிறிஸ்தவன். அதாவது பெயரளவில் கிறிஸ்தவனாக வாழ்ந்து வந்தவன்.



வந்தவுடன் தனது மனைவியுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது இன்று ஆராதனையில் போதகர் என்ன செய்தி அளித்தார் எனக் கேட்டான்.



இப்படி ஓர் கேள்வியை அவன் ஒரு போதும் கேட்டதில்லை. உண்மையில் போதகர் என்ன செய்தி அளித்தார் என்பதை அவள் மறந்தே போய் விட்டாள். ஒன்றுமே அவளுக்கு நினைவு வரவில்லை.



அவள் சொன்னாள் “போதகர் என்ன செய்தி கொடுத்தார் என்பதை நான் மறந்து விட்டேன். ஆனால் நான் வீட்டிற்கு வந்து என்னுடைய கடையில் பயன்படுத்திய நிறை குறைவாக காண்பிக்கும் மரக்காலை எறிந்து விட்டேன்.”



அவளது இந்த செயலால் கணவனும் உண்மையாக கிறிஸ்துவை பின்பற்ற ஆரம்பித்தார்.



சிலருக்கு செய்தி முழுமையாக தெரிந்தாலும் ஒன்றுக்கும் கீழ்ப்படிய மாட்டார்கள். 🤣🤣

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *